காவேரிப்பாக்கம் அருகே வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

X
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், கலைஞர் கனவு இல்ல திட்டம், சிமெண்டு சாலை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெருவளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் ஜெயசுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவல கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சி.எஸ்.கே.குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஹமத் பாட்ஷா, சிவப்பிரகாசம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன். ஊராட்சி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

