கம்பம் நகராட்சியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

கம்பம் நகராட்சியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
X
நகராட்சி
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 12,000 குடிநீர் இணைப்புகள் உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் குடிநீர் வரியை செலுத்தாத நிலையில் அதனை செலுத்துமாறு நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (பிப்.25) முதல் குடிநீர் கட்டணம் நிலுவை தொகையை செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை துவங்கி உள்ளதாக நகராட்சி நிர்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story