பேருந்து போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்த எம் எல் ஏ

பேருந்து போக்குவரத்தினை   கொடியசைத்து தொடங்கி வைத்த எம் எல் ஏ
X
சிறுபேர்பாண்டி அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேருந்து போக்குவரத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார் பெற்றோர்கள் மகிழ்ச்சி.
சிறுபேர்பாண்டி அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேருந்து போக்குவரத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கொடியாmசைத்து தொடங்கி வைத்தார் பெற்றோர்கள் மகிழ்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்,சிறுபேர்பாண்டி கிராமத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் வழியாக தாம்பரத்திற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த மனுவினை விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரை செய்தார்.இதனைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபேர்பாண்டி கிராமத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் வழியாக தாம்பரத்திற்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து டவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
Next Story