விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

X
பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பால சுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார். கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலர் அலுவலக உதவி இயக்குனர் கார்த்திகேயன், தொழில்நுட்ப அலுவலர் ராதா மற்றும் அலுவலர்கள், விசைத்தறி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினை, சூரிய ஒளி மின்சார திட்டம், நவீன விசைத்தறிகளுக்கு மாற்றம் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Next Story

