ராமநாதபுரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

X
ராமநாதபுரம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) முதல் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள 32 மீனவர்களை படகுடன் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தின் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) விசைப்படகு மீனவர்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர். மீனவர்களின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் ஆதரவு தர இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story

