இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன்

4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் 4-ம் ஆண்டு நினைவு தினம், நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. கீழையூர் கடைவீதியில், கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், தா.பாண்டியன் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வீ.சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜாஅலாவூதீன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் எம்.பர்ணபாஸ், சிபிஐ ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.சங்கர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ரமேஷ், சிபிஐ கீழையூர் கிளைச் செயலாளர் கே.ரவி, கிளை பொறுப்பாளர்கள் கே.வீரமணி, ஆர்.செல்வம், ஜனநாயகம், இளைஞர் பெருமன்ற கிளைச் செயலாளர் வீ.விஜயரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story