ராமநாதபுரம் அரசு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழா தொண்டி அரசு மேற்கு தொடக்கப் பள்ளி 87 ஆம் ஆண்டு விழா மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் புல்லாணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார். தமுமுக சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசும் வழங்கப்பட்டது. மாணவ மாணவியர்களில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கினர். கவுன்சிலர் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, பெரியசாமி, எஸ்எம்சி தலைவி ரோசானியா, பிடிஏ தலைவர் ஜெயந்தன், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, ரோட்டரி துணை ஆளுனர் வெற்றிவேலன், ராஜசேகர், ஜிப்ரி , காதர், பரக்கத் அலி, ஜலால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.
Next Story

