ராமநாதபுரம் கோவில் திருவிழாவில் ஏராளமான பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் கமுதி தனி ஆயுதப் படையினருக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற கோட்டை முனீஸ்வரன் கோவில் உள்ளது இங்கு மாசிக் கலறியை முன்னிட்டு இன்று கும்பம் எடுக்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோட்டைமேடு யூனியன் அலுவலகம் முன்பு மேள தாளங்களுடன் கும்பம் புறப்பட்டு அக்கினி சட்டி, பால்குடம் ஏந்திய பக்தர்களுடன் ஊர்வலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலை வந்து அடைந்தனர். கும்ப நீர், பால்குட பால் கோட்டை முனீஸ்வரனுக்கு சிறப்பு அபிசேகம் செய்ய பட்டது. முடிவில் காவல்துறை சார்பில் அன்ன தானம் வழங்க பட்டது. விழா ஏற்பாடுகளை கமுதி தனி ஆயுத படையினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
Next Story

