சங்கரன்கோவிலில் திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

X
மத்திய அரசைக் கண்டித்து, தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் சங்கரன்கோவிலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஹிந்தி திணிப்பை கண்டித்தும் தலைமை அஞசல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்டதிமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். போராட்டத்தில் திமுக மாணவரணி நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.
Next Story

