முறையாக குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் பல்லடம் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முறையாக குடிநீர் வழங்காததால் காலி குடங்களுடன் பல்லடம் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள் . போராட்டத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டு எஸ்.ஆர்கே நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றன. கடந்த 45 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வழங்காததால் அப்பகுதியை சேர்ந்த 50 மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பல்லடம் காவல் ஆய்வாளர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி பொறியாளர் சுகுமார் பொதுமக்களிடம் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நாங்கள் நகராட்சி அலுவலகம் வந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் தற்போதுதான் எங்களிடம் குடிநீர் வழங்க உத்தரவு அளத்துள்ளீர்கள் என பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் வார்டு உறுப்பினர் கவிதாமணி ராஜேந்திர குமார் நகர்மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 45 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம். இதுகுறித்து பலமுறை நகர்மன்ற தலைவரிடம் முறையிட்டும் குடிநீர் வழங்கவில்லை. எங்கள் பகுதியில் குடிநீர் வழங்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக சாலைமறியல் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
Next Story