வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி மையத்தின் சார்பாக கிராம அளவிலான அடிப்படை பயிற்சி

சிவகங்கை அருகே சாமியார்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி மையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு கிராம அளவிலான அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சாமியார்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி மையத்தின் சார்பாக விவசாயிகளுக்கு கிராம அளவிலான அடிப்படை பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் உழவர் பயிற்சி மைய வேளாண்மை அலுவலர் வீரையா உழவர் பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும், விவசாயிகள் நெல் பயிருக்கு பின் மாற்றுப் பயிராக் உளுந்து பயிருடுவதால் மண்வளம் பெறும் எனவும், விவசாயிகள் விதைகள் வாங்கும் போது விதைகளின் படிநிலைகளான வல்லுநர் விதை, ஆதார விதை , சான்றுபெற்ற விதை மற்றும் உண்மை நிலை விதைகள் பற்றியும், பசுந்தாள் உரப்பயிரான தக்கைபூண்டு நன்மைகள் பற்றியும், பயிர்பாதுகாப்பு முறைகள் பற்றியும் அட்மா திட்டம் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். முன்னோடி விவசாயிகள் அப்துல்ரகுமான், கலா, ஜெயராமன் உட்பட 20க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கருத்துக்களை கேட்டு பயனடைந்தனர். அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் தம்பிதுரை, ராஜா ஆகியோர் பயிற்சிகான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.
Next Story