விவேகானந்தா கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

X
இந்திய அரசின் சமூக நலன் மற்றும் விளையாட்டுத் துறை மண்டல இயக்குனரகம், சென்னை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நடத்தும் ஏழு நாட்கள் தேசிய முகாம் 22 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு முகாமில் கன்னியாகுமரி திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறை, வட்டகோட்டை,திற்பரப்பு,, பத்மநாபபுரம் அரண்மனை முதலிய இடங்களை மாணவர்கள் பார்வையிட இருக்கின்றார்கள் . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான கர்நாடகா , ஆந்திர பிரதேசம் மகாராஷ்டிரா, கேரளா , ஹரியானா குஜராத் ,ராஜஸ்தான் அசாம், ஒடிசா,தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை குமரி மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Next Story

