கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில்  குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
X
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 100000/- ரூபாய் அபராதமும் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட (SC/ST) சிறப்பு நீதிமன்றம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 100000/- ரூபாய் அபராதமும் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட (SC/ST) சிறப்பு நீதிமன்றம் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜயகுமார் (28/20) த/பெ அன்பழகன், உப்போடை, எளம்பலூர் சாலை, பெரம்பலூர் மாவட்டம். என்பவரும் நவாஸ் முகமது (26/20) த/பெ முகமது அன்சாரி, காந்தி நகர், வடக்குமாதேவி ரோடு, பெரம்பலூர் மாவட்டம். ஆகிய இருவரும் கடந்த 12.12.2020-ஆம் தேதி ஆத்தூர் சாலை, ரங்கராஜின் பிளாட், சுடுகாடு அருகில், மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது, அப்போது நவாஸ் முகமது , விஜயகுமாரின் கழுத்தில் பிராந்தி பாட்டிலை வைத்து குத்தினார். இதில் விஜயகுமார் கழுத்தில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக விஜயகுமார் தாய் மஞ்சுளா (50/20) க/பெ அன்பழகன், என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் Cr.No. 2496/20 U/s 302 IPC. 3 (2) (Va) SC/ST POA திருத்தச் சட்டம் 2015 இன்படி வழக்கு பதிவு செய்து எதிரி, நவாஸ் முகமது (26/20) த/பெ முகமது அன்சாரி, என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணை முடிந்த நிலையில் மேற்படி வழக்கில் இன்று 26.02.2025-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கின் குற்றவாளிகளான *நவாஸ் முகமது (26/20) த/பெ முகமது அன்சாரி, என்ற நபருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனையும் மற்றும் SC/ST Act குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனையும் வழங்கிய *பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி ( பொறுப்பு) SC/ST சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டார்கள்.
Next Story