சாதி பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

சாதி பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழகத்தில் சாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தக்கேரியும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமை கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் ,தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணம் வழங்க கோரியும் ,சாதி வெறி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் மண்டல செயலாளர் சுரேஷ் தலைமையிலும் ஆண்டிபட்டி வட்டார பொறுப்பாளர் மயிலை மகாலிங்கம் ,பெரியகுளம் போடி வட்டார செயலாளர் புரட்சி பாண்டி ,கம்பம் வட்டார செயலாளர் வைரவன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜோதிபாசு பெரியகுளம் வட்டார துணை செயலாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இருந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் பெண்கள் பங்கேற்றனர்
Next Story