புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தொடர்ந்து வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

X
விருதுநகரில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தொடர்ந்து வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயஇனத்தைச் சேர்ந்த மாணவன் புல்லட் போட்டியதற்காக உயர்ந்த சாதியினர் அவரது கையை வெட்டியதை கண்டித்தும்,திருநெல்வேலி மாவட்டத்தில் சக மாணவர்கள் முன்பு தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவியை காலில் விழவைத்து வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், மேலும் தமிழகத்தில் சாதியின் பெயரால் தொடர்ந்து நடக்கும் வன்கொடுமைகளை கண்டு கொள்ளாமல் தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து, இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் ,நகர செயலாளர் சிலம்பன் தலைமையில் மாநில செயலாளர் வழக்கறிஞர் அணி ஸ்ரீதர் முன்னிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஈடுபட்டனர். மேலும் இந்த நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story

