மக்கள் தொடர்பு முகாம் : இடம் மற்றப்பட்டாதல் மக்கள் அவதி
அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மக்களை காக்க வைத்து உணவுக்காக கையேந்தி வைத்து அதிகாரிகள், ஆடு மாடுகளை போல் பயனாளிகளை டிராக்டரில் ஏற்றி வந்த அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளை நான்கு மணி நேரம் காக்க வைத்து அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர்
திருத்தணியில் அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மக்களை காக்க வைத்து உணவுக்காக கையேந்தி வைத்து அதிகாரிகள், ஆடு மாடுகளை போல் பயனாளிகளை டிராக்டரில் ஏற்றி வந்த அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளை நான்கு மணி நேரம் காக்க வைத்து அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை வைத்து பாடாய்படுத்திய அதிகாரிகள். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட பீரகுப்பம் என்ற ஊராட்சியில் மதுரா என்ற பகுதியில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் அந்த பஞ்சாயத்தில் நிகழ்ச்சி நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக அருகிலுள்ள கே.ஜி. கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ச்சியை நடத்தினார்கள் இப்படி நிகழ்ச்சி ஒரு பஞ்சாயத்தில் கூறிவிட்டு மற்றொரு பஞ்சாயத்தில் பகுதியில் நடத்துவது பொதுமக்களுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை என்று அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர் நிகழ்ச்சிக்கு மாற்றுத் திறனாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் காலை 9:00 மணிக்கு வர வைத்துள்ளனர் ஆனால் நண்பகல் 1:30 மணிக்குத்தான் அவர்களுக்கு இரு சக்கர மோட்டார் சைக்கிள்களை முறையாக வழங்கப்பட்டது இதனால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அவர்களுக்கு முறையான இருக்கைகள் இல்லாமல் கடும் அவதி அடைந்தனர் இந்த நிகழ்ச்சியில் ரூபாய் 27 லட்சத்திற்கு 1)உட்பிரிவு பட்டா,2) இணையவழி சான்றிதழ்கள், 3) குடும்ப அட்டை, 4) வாக்காளர் அடையாள அட்டை, 5) இலவச தையல் இயந்திரங்கள் என ரூபாய் 27 லட்சத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிகழ்ச்சி நடைபெறும் என்று காலை 10:30 மணிக்கு தொடங்கும் என்று பயனாளிகளை வரவழைத்து விட்டு காலதாமதமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் வருகை தந்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் பெயர் போட்ட பட்டியலில் இருந்த டிஜிட்டல் பேனரில் இருந்த அமைச்சர் நாசரும் வரவில்லை இவரை சந்தித்து தங்கள் குறைகளை கூறலாம் என்ற வந்த பொதுமக்களுக்கும் ஏமாற்றம் நிகழ்ந்தது நிகழ்ச்சிக்கு வராத அமைச்சருக்கு டிஜிட்டல் பேனரில் ஏன் பெயர் போடுகிறீர்கள் என்று பொதுமக்கள் மனதுக்குள் வருத்தப்பட்டு கொண்டனர் இந்த நிகழ்ச்சி சரியான திட்டமிடுதல் இல்லாததால் மக்களை கடும் வெயிலில் வரவழைத்து காக்க வைத்து அதிகாரிகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசின் திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்படுவதாக கூறிவிட்டு கண்துடைப்புக்கு சில பொருட்களை வைத்து இதுதான் அந்த துறையின் உற்பத்தி பொருள் மற்றும் பயன்படுத்தும் பொருள் மக்களுக்கு வழங்கும் பொருள் என்று அதிகாரிகள் கண்துடைப்பு நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர் நடத்தியும் உள்ளனர் உலகத்திலேயே கிரானைட் பளிங்கி கல்லில் கலர் கோலம் போட்டு மாவட்ட ஆட்சியரை வரவேற்ற அங்கன்வாடி பணியாளர்கள் நிகழ்ச்சியில் அவர்கள் வழங்கிய பாயாசம் மற்றும் கொழுக்கட்டையை வாங்கி சாப்பிட்டனர் அதிகாரிகள் ஆனால் மக்களை அவர்கள் சாப்பிடுவதை மட்டும் வேடிக்கை பார்க்க வைத்தனர் அங்கன்வாடி பணியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு காலை 10 மணிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவதற்காக அழைத்து வந்தனர் அவர்களை பள்ளி விடுமுறை எடுக்க வைத்து நான்கு மணி நேரம் காக்க வைத்து போல் அரசு நிகழ்ச்சியில் காலதாமதமான நிகழ்ச்சியில் மாணவர்களையும் பயன்படுத்திவிட்டு மாணவர்களை கண்தொடைப்புக்கு மாவட்ட ஆட்சியர் உடன் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்க வைத்து ஆசிரியர்களுடன் ஒரு புகைப்படத்தை எடுத்து விட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பிய அதிகாரிகள் இப்படி மாணவர்களையும் இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தி நிகழ்ச்சி நாடகம் ஆடிய அதிகாரிகள் தங்கள் வீட்டு பிள்ளைகளை இப்படி செய்வார்களா என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிக்கு டிராக்டரில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பயனாளிகளை ஆடு மாடுகளை ஏற்றி வருவது போல் பொதுமக்களை ஏற்றி வந்த அவலமும் நடைபெற்றது இப்படி பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய நிகழ்ச்சியில் பொதுமக்களை அலைக்கழித்து காக்க வைத்து நிகழ்ச்சி என்ற பெயரில் டிராமா நடத்திய அதிகாரிகள் அதிகாரிகளை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் மௌனமாய் போன பொதுமக்கள் மக்களின் மௌனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து இதுபோல் சம்பவங்களில் ஈடுபடும் அதிகாரிகள் நிகழ்ச்சியின் இறுதியில் 500 பேருக்கு உணவு வழங்குவதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் உணவு ஆண்டாவை எடுத்து வந்து விட்டு பிரின்ஜ் சாதம் என்ற பெயரில் உணவுக்காக நிகழ்ச்சிக்கு வந்த பொது மக்களை தட்டி ஏந்தி காக்க வைத்து அதிகாரிகள் அதுவும் பிளாஸ்டிக் கலந்த பேப்பர் தட்டு வழங்கி அதை கையில் பிடித்து சாப்பிட கூட முடியாமல் கஷ்டப்பட்டு உணவு அருந்திய பொதுமக்கள் போதிய இடவசதி இல்லை பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட கூட முடியாமல் கஷ்டத்தை வெளியில் சொல்ல முடியாமல் கடும் வெயிலில் பொது மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் இதில் ஆய்திராவிடர் நலத்துறை அதிகாரிகள் வருவாய்துறை அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து இப்படி மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி நிகழ்ச்சி நடத்துவது நியாயமா?? மக்களுக்கான திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றால் மக்களை இப்படி காக்க வைத்து வறுத்து எடுத்து நிகழ்ச்சியை நடத்தலாமா கேள்வி??
Next Story







