கபிலர்மலை அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.

கபிலர்மலை அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.
X
கபிலர்மலை அருகே பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து பொருட்கள் சேதம்.
பரமத்தி வேலூர், பிப். 26: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரிய சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம்(45). இவர் பெரிய சோழி பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே பழைய இரும்பு மற்றும் பழைய பிளாஸ்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். பல்வேறு பகுதியில் இருந்து வாங்கி வரப்பட்ட மற்றும் பழைய இரும்பு வியாபாரிகளால் கொண்டு வரப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய இரும்புகளை குடோனில் குவித்து வைத்திருந்தார். இந்நிலையில் அதிகாலை சுமார் 5 மணி அளவில் அங்கு குவித்து வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மள மள என பரவி கூரையிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த பாலசுப்ரமணியம் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பிளாஸ்டிக் பொருட் களில் தீ பற்றி எரிவதை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து பால்சுப்பிரமணியம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பிளாஸ்டிக் பொருட்களில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை பல மணி நேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து அணைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க் கப்பட்டது இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரும்பு சாமான்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story