வயிற்று வலி காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

X
சென்னை அடுத்த திருவேற்காட்டில் வயிற்று வலி காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை சென்னை அடுத்த திருவேற்காடு ,சுந்தர சோழபுரத்தை சேர்ந்தவர் விஜய் என்கின்ற ஹேமச்சந்திரன் (29),லோடு ஆட்டோ சொந்தமாக வைத்து தொழில் செய்து வந்த இவருக்கு பல மாதங்களாக வயிற்று வலி பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவ சிகிச்சையும் தொடர்ந்து மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஹேமச்சந்திரன் அவரது வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஹேமச்சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். திருமணம் ஆகாத நிலையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் தான் ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளார் வயிற்று வலி காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அதனால் தற்கொலையா? என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

