ஹிந்தி மொழித் திணிப்பு முயற்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஹிந்தி மொழித் திணிப்பு முயற்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
X
முன்னாள் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திண்டிவனம் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எம்.யு.பிரசன்னா தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவா் சேகா், மாநில தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, நகரச் செயலா் கண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் சுபாசு சந்திரபோசு, லோகநாதன், ஞானசேகரன் உள்ளிடோா் பங்கேற்றனா்.
Next Story