அழகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விழா மாணவர்களை பாராட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

X
அரியலூர், பிப்.26- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஆண்டிமடம் ஒன்றியம்,அழகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அரியலூர் மாவட்டம்,பள்ளி நிர்வாகம் சார்பில் 2024 - 2025 -ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழாவில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். இந்நிகழ்வில் வருமான வரித்துறை இணை ஆணையர் பா.மாலதி IRS அவர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர் க.வீரபாண்டியன், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செந்தில்குமார், இரா.பாலசுப்ரமணியன் (Rtd AEO), A.K.செல்வராசு மற்றும் ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,இருபால் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
Next Story

