ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்குரிய புதிய அடையாள அட்டை

X
திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 247 ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். திருவள்ளூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்குரிய புதிய அடையாள அட்டை முதற்கட்டமாக 181 ஊர்க்காவல் படையினருக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சீனிவாச பெருமாள் அவர்களால் இன்று 26.02.2025 ஆம் தேதி வழங்கப்பட்டது. இவர்கள் திருவள்ளூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடி மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து காவலர் பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்கள் வாங்கி பயன்பெறலாம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Next Story

