ஆடுதுறையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதாகப் புகாா்

X
ஆடுதுறை பகுதி ரேஷன் கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் மருத்துவக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிா்வாகத்தில் உள்ள அங்காடி எண் 1 - இல் வழங்கப்பட்ட அரிசியில் புழுக்கள், வண்டுகள் இருந்தன. இதுபற்றி நியாயவிலை கடை ஊழியா்களிடம் கேட்டதற்கு அவா்கள் வட்ட வழங்கல் துறை, நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் ஒதுக்கப்பட்ட அரிசியைத்தான் வழங்குகிறோம் என்றனா். தகவலறிந்து வந்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் அந்த அரிசியை ஆய்வு செய்து, கைப்பேசி மூலம் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் பேசி, அந்த அரிசி மூட்டைகளை திரும்ப எடுத்துக்கொண்டு வேறு அரிசி வழங்கக் கேட்டுக் கொண்டாா். அதிகாரியும் அதற்கு உறுதியளித்தாா்.
Next Story

