ராமநாதபுரம் முத்தாலம்மன் கோவில் சிவதாத்திரி திகட்ட விழா நடைபெற்றது
ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் 112-ம் ஆண்டு மஹா சிவராத்திரி திருவிழாவின் 9-ம் நாள் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட கலைபண்பாட்டுத் துறை நாட்டுப்புற கலைபயிற்சி மையத்தின் சிலம்பாட்ட ஆசிரியர் ஆ.தனசேகரன் தலைமையில் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் கரகாட்ட ஆசிரியர் .பாண்டியம்மாள் தலைமையில் கரகாட்ட மாணவர்கள் ஒயிலாட்ட ஆசிரியர் இராமகிருஷ்ணன் தலைமையில் ஒயிலாட்ட நிகழ்வுகள் தேரோட்டம் முன்பு வெகு விமர்சியாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற சிலம்பாட்ட ஆசிரியர் லோ.ஆகாஷ் தலைமையில் கருப்பசாமி ஆட்டம் புலி யாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். ஏற்பாடுகளை மு.லோகசுப்பிரமணியன் மாவட்ட திட்ட அலுவலர் கலைபண்பாட்டுத்துறை ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story




