ஸ்டேட் வங்கி சார்பில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சி

ஸ்டேட் வங்கி சார்பில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சி
X
சேலத்தில் நடந்தது
ஸ்டேட் வங்கி சார்பில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் சி.ஜே.பிளாசாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேலம் வணிகம், செயல்பாடுகளின் துணை பொதுமேலாளர் கல்பனா முதலியார் தலைமை தாங்கினார். மியூச்சுவல் பண்ட் உதவி துணைத்தலைவர் யாசின் ஷாகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் சந்தை கொந்தளிப்பை அறியும் விளக்க முறைகள் என்ற தலைப்பில் பேசினார். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிக்கலான சந்தை நிலைமைகளை கடந்து செல்ல தேவையான அறிவு மற்றும் நிபுணத்துவ மேம்பாடு ஆகியவற்றை அளிக்க பாரத ஸ்டேட் வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது என்று மண்டல மேலாளர் சரவணன் கூறினார். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story