இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் முதலிடம் தமிழகம் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்தார்.*

X
இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் முதலிடம் தமிழகம் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி வீரமணி பேசும் போது, இன்று செம்மொழியான தமிழ் மொழியை தள்ளிவிட்டு, பண்பாட்டை பின்னால் ஒதுக்கி மிகப்பெரிய அளவில் மும்மொழி திட்டம் என்று தொடர்பில்லாத ஒன்றை திணிக்கிறார்கள். அதன் மூலம் மீண்டும் வடமொழி ஆதிக்கத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்கள். வடமொழி ஆதிக்கம் என்பது மொழி ஆதிக்கம் அல்ல. பண்பாட்டுப் படையெடுப்பு. அந்த பண்பாட்டு படையெடுப்பை தான் பல்வேறு ரூபங்களில் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சில பைத்தியங்கள் சில புல்லுருவிகள் உளருவதை பார்த்து செய்தியாளர்கள் கூட என்னிடம் ஏன் பதில் சொல்லவில்லை என கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. பைத்தியக்காரர்களுக்கு தேவை வைத்தியமே தவிர. பதில் அல்ல. மருத்துவக் கல்லூரி படிப்புக்கு தேவையானது இறந்த உடல்கள். ஆனால் நம்முடைய நாட்டில் மதங்கள், சடங்குகள், சனாதனம், சம்பிரதாயம் அதற்கு அனுமதி வழங்குவதில்லை. எரிக்க வேண்டும் அல்லது புதைக்க வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதில்லை. தற்போது அந்த சிந்தனை வந்தது பகுத்தறிவு இயக்கத்தினால் மட்டுமே முடியும்.குடிநீர் தூயதாக இருக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் கும்பமேளாவில் அது நடக்கவில்லை. ஆராய்ச்சி செய்து பார்த்தபோது மலம் கழிவுகள் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதில் குளித்தால் அல்லது குடித்தால் தொற்றுநோய் வரும் என்று கூறுகின்றனர். இதை கேட்டால் பிரதமர் மோடி இந்து மதத்தைப் பற்றி அந்நிய சக்திகள் தவறுதலாக பேசுகிறார்கள் என்கிறார்.வடநாட்டில் நிர்வாண சாமியார்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள். தமிழகத்தில் அது நடக்காது. ஏனென்றால் இது பகுத்தறிவு மண். திராவிட மண். சம்பிரதாயம் சடங்கு என்பது ஒரு காலத்தில் மவுல்யமாக இருந்தது. இதை மீண்டும் திணிக்க முயல்கின்றனர். மொழி தொடர்பான போராட்டம் உட்பட அனைத்தும் பகுத்தறிவுக்கும் பழமைக்கும், ஆதிக்கத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக நடக்கக்கூடிய போராட்டம்.திராவிட மாடல் ஆட்சி அமைந்த போது அண்ணா மூன்று சாதனைகளை செய்தார். சுயமரியாதை திருமணங்களை ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு என்று பெயரிட்டார். இரு மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டார். பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்ற தனி சட்டத்தை இயற்றியது திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே. திராவிடர் கழக புரட்சி என்பது ரத்தம் சிந்தாத புரட்சி. யார் தலையும் வாங்கவில்லை. எந்த கோயிலையும், மசூதியையும் இடிக்க வில்லை. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை குலைப்பதற்கு பல முயற்சிகள் நடக்கிறது. அது பலனற்று போன நிலையில் பெரியாரைப் பற்றி பேசி கோபத்தை தூண்டி விட முயற்சிக்கின்றனர். வெறிநாய் தொல்லையால் பலர் அவஸ்தை படுகிறார்கள். அதைக் கூண்டில் அடைப்பதை விடுத்து நாய்களை கொல்லக்கூடாது. கலைஞர் முதல்வராக இருந்த சமயம் எதிர்க்கட்சித் தலைவராக காமராஜர் இருந்தபோது ஆங்கிலம் வேண்டும் என உறுதியாக கூறினார். இந்த தொலைநோக்கு பார்வை அவருக்கு இருந்ததால் தான் பெரியார் அவரை பச்சை தமிழன் என பாராட்டினார். ஒருவேளை ஆங்கிலத்தை ஏற்க மறுத்து விட்டால் ஹிந்தி வந்து குந்திக் கொள்ளும் என கலைஞர் அவரது பாணியல் தெரிவித்தார். மீண்டும் தங்களிடம் ஆட்சி இருக்கும் காரணத்தால் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் முதலிடம் தமிழகம் என மத்திய அமைச்சரே தெரிவித்துள்ளார்.சத்துணவு, காலை உணவு பள்ளிகளில் வழங்குவதால் அங்கு ஜாதி மதம் இல்லாமல் போகிறது. திராவிட மாடல் ஆட்சி இருப்பதால்தான் தமிழகத்தில் மனுதர்மம் இல்லை. தமிழ்நாட்டில் காவி ஆட்சி வந்தால் மீண்டும் மனுதர்மம் வந்துவிடும். பள்ளிகள் மூடப்படும். தமிழில் கூட அம்மா என்று அழைக்க விடமாட்டார்கள். மாதாஜி பிதாஜி என்பதை போல் தமிழ் பெயருக்கு பின்னால் ஜி இணைந்து விடும் என பேசினார்
Next Story

