ராணிப்பேட்டை அமைச்சரின் புதிய அறிக்கை!

ராணிப்பேட்டை அமைச்சரின் புதிய அறிக்கை!
X
கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
தமிழக கைத்தறி துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகிற 1-ந்தேதி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்குதல், கண்தானம், ரத்ததான முகாம், மருத்துவ முகாம், மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், செயற் குழு பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பிற அணி அமைப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story