தேங்காய் ஏலம்

தேங்காய் ஏலம்
X
வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 17 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 17 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்க வெப்பிலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 997 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில், ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ. 45.10க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 53.69க்கும் ஏலம் மூலமாக விற்பனையானது. இதில், மொத்தம் 328 கிலோ எடையிலான தேங்காய்கள் விற்பனையாகின. இவற்றின் விற்பனை மதிப்பு ரூ. 17 ஆயிரத்து 297 ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story