நாமக்கல்லில் நாளை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் அவசர கூட்டம் !

X
Namakkal King 24x7 |27 Feb 2025 11:36 AM ISTதேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவால் அறிவிக்கப்படும் விலையே வியாபாரிகள், முட்டை வாங்கும் விலையாக இருக்க வேண்டும்.இதை கண்காணிக்க குழுவின் அவசர கூட்டம் நாளை(பிப் 28) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள மண்டல என்இசிசி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவால் (National Egg Coordination Committee)(என்.இ.சி.சி) அறிவிக்கப்படும் முட்டை விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக இருக்க வேண்டும், என்பதை கண்காணிக்க, அகில இந்திய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அவசரக் கூட்டம் நாமக்கல்லில் நாளை (பிப்ரவரி-28) நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.... கடந்த ஒரு மாதத்திற்கும் மேல், நாமக்கல் மண்டலத்தில் என்இசிசி அறிவிக்கும் முட்டை விலைக்கும், பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்கும் விலைக்கும் வித்தியாசம் அதிகமாகி வருகிறது. என்இசிசி விலையைவிட, விலையை குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், கோழிப் பண்ணையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், இந்த விலை அகில இந்திய அளவில் மற்ற மண்டலங்களையும் கடுமையாக பாதிக்கிறது. அதனால், என்இசிசி மூலம் அறிவிக்கப்படும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக இருக்க வேண்டும் என, பெரும்பான்மை கோழிப்பண்ணையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அதனை நடைமுறைப்படுத்த அகில இந்திய அளவில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஹைதராபாத், விஜயவாடா, ஹோஸ்பெட், நாமக்கல், வெஸ்டு கோதாவரி, தனுகு உள்ளிட்ட மண்டலங்களில், இனி வரும் நாட்களில், என்இசிசி அறிவிக்கும் விலையே, வியாபாரிகள் முட்டை கொள்முதல் விலையாக இருக்கும் என, கடந்த, 22ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த என்இசிசி கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை கண்டிப்பாய் நடைமுறைப்படுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அகில இந்திய முட்டை விலை ஒழுங்குபடுத்தும் குழுவின் கூட்டம், நாளை பிப்ரவரி 28ம் தேதி காலை 11 மணிக்கு, நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள மண்டல என்இசிசி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம் மற்றும் வட்டாரக்குழு உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள், முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, ஆலோசனை வழங்க உள்ளனர். என்இசிசி அறிவிக்கும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக இனி வரும் நாட்களில் கண்டிப்பாய் இருக்க தேவையான நடவடிக்கைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு எடுக்கும். அனைத்து பண்ணையாளர்களும் ஒன்றிணைந்து அதை கடைபிடித்தால் மட்டுமே, முட்டை விற்பனையில் மைனஸ் விலை என்ற, முட்டைக் கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயத்தை, நாமக்கல் மண்டலத்தில் இருந்து முற்றிலுமாக அகற்ற முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
