போலீஸ் பாதுகாப்பு

X
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் - 2 மாணவ - மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வருகிற மார்ஸ் மாதம் 3-ந் தேதி தொடங்கி மார்ச் 23ஆம் தேதி வரையும், பிளஸ் - 1 மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு மார்ச் 5-ந் தேதி முதல் மார்ச் 25 - ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு பொதுத்தேர்வுகளையும் மாவட்டத்தில் 47 ஆயிரத்து 354 மாணவ - மாணவிகள் எழுத உள்ளன. இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 108 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிளஸ் - 1 மற்றும் பிளஸ்- 2 வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த வினாத்தாள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இதனை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மாவட்டத்தில் ஈரோடு, கோபி, அந்தியூர், தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள கட்டுக்காப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்த அறையினை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டு காப்பு மையத்தில் பொது தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த வினாத்தாள் அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல் கோபி, அந்தியூர், தாளவாடி கட்டுக்காப்பு மையத்திலும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Next Story

