இருவர் கைது

X
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி உழவன் நகரை சேர்ந்தவர் சிதம்பரம் (46). இவரும் இவரது மனைவி வனிதா ஆகியோர் கிராமங்களில் ஆடுகளை விலைக்கு வாங்கி மொடச்சூர், குன்னத்தூர், சிறுவலூர் போன்ற பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று கோபி அருகே உள்ள மொடச்சூர் வாரசந்தைக்கு 18 ஆடுகளை வேனில் விற்பனைக்காக சிதம்பரம்,வனிதா ஆகியோர் கொண்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் ஒரு ஆடு மட்டும் அதில் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வனிதா அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் திருட்டு போன ஆட்டை விற்பனை செய்வதற்காக இருவர் சிறுவலூர் சந்தைக்கு வந்திருப்பதாக வனிதாவிற்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வணிகவும் அவரது உறவினர்களும் சிறுவலூர் சந்தைக்கு சென்று அங்கு திருடப்பட்ட ஆற்றுடன் இருந்த கோபி வேலூர் மணி நகர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மணிகண்டன், கரட்டடி பாளையம் காந்தி வீதியை சேர்ந்த விஜயன் ஆகியோரை பிடித்து போலீஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மணிகண்டன் மற்றும் விஜயனை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

