மக்காச்சோளம் விலை குறைவால் விவசாயிகள் கவலை

X
போடி, மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, விசுவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2,000 ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. போதிய மழை இன்மை காரணமாக மக்காச்சோளம் விளைச்சல் கடந்தாண்டை விட பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு முன்பு 2,800 வரை கொள்முதல் செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது ரூ. 2,350 முதல் 2,500 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story

