கடந்த மூன்று மாத கூலி பாக்கியை உடனடியாக தர வலியுறுத்தி

X
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, பாங்கல் ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று பணியை புறக்கணித்துவிட்டு, சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. பாஸ்கர் தலைமையில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தலையில் முக்காடு போட்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ கிளைச் செயலாளர் கே.எஸ்.ரமேஷ், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஐயப்பன், மாணவர் பெருமன்ற மாவட்ட பொறுப்பாளர் சேஷாத்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

