கஞ்சா வழக்கில் தப்பியவர் நீதிமன்றத்தில் சரண்

X
தேனி மாவட்ட போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாரால் கடந்த மாதம் கஞ்சா வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மனோஜ்குமார் என்பவரை போலீஸ் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய மனோஜ்குமார் நேற்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி ஜெயமணி உத்தரவில் போலீசார் மனோஜ்குமாரை தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Next Story

