புதுச்சாவடி அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினக்கொண்டாட்டம்.*

X
அரியலூர் பிப்27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சாந்தி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார் . அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். கணித பட்டதாரி ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.வானவில் மன்ற கருத்தாளர் ஆனந்தவள்ளி கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதின் சிறப்புகளையும் சர் சி வி ராமன் அவர்களின் ஒளிச்சிதறல் சார்ந்த சோதனை ஆய்வு கட்டுரை நோபல் பரிசு பெற காரணமாக இருந்தமை பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறி ஒளியியல் சார்ந்த முற்பட்டக நிறப்பிரிகை சோதனை ஒளிச்சிதறல் மாயமாகும் நீர் காந்த ஊசி திசை காட்டும் கருவி சதவீத கணித செயல்பாடுகள் கூட்டு வடிவங்களில் பரப்பளவு மற்றும் சுற்றளவு காணுதல் கண்ணின் கதை மற்றும் செயல்பாடு போன்ற அறிவியல் செயல்பாடுகளை மாணவர்களுக்கு செய்து காட்டி மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கம் அளித்தார்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய அறிவியல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.முடிவில் ஆசிரியர் ஹேமலதா நன்றி கூறினார்.
Next Story

