உதகை வேல்வியு லிங்க கோவிலில் சிறப்புஅபிசேக ஆராதனை அன்னதானம் என  சிவராத்திரி கோலாகம் ...

உதகை வேல்வியு லிங்க கோவிலில் சிறப்புஅபிசேக ஆராதனை அன்னதானம் என  சிவராத்திரி கோலாகம் ...
உதகை வேல்வியு லிங்க கோவிலில் சிறப்புஅபிசேக ஆராதனை அன்னதானம் என  சிவராத்திரி கோலாகம் ... நீலகிரி மாவட்டம் ஊட்டியின்  வேல்யூ பகுதியில் அமைந்துள்ள  லிங்க கோயில் இங்கு மயக்கும் மலைகள்  சுற்றி இருக்க மக்களால் சிவபெருமான் மீதுள்ள மிகுந்த பக்தியாலும் அன்பாலும் கட்டப்பட்ட ஒரு அழகான கோயில். இந்த கோயில் லிங்க வடிவில் கம்பீரமாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது.  இத்திருகோவில்  வலிமைமிக்க சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் சின்னமான லிங்கத்தின் முக்கிய சன்னதி இங்கு இருந்தாலும், முழு வளாகமும் பசுமை மற்றும் அமைதியுடன் கூடிய ஏராளமான சிறிய சிவலிங்கங்களால் சூழப்பட்டுள்ளது. சிவபெருமானின் புனித வாயில் காவலராகவும் வாகனமாகவும் இருக்கும் நந்தி காளையின் அழகியசிற்பமும் உள்ளது. இந்த லிங்க கோவிலில் சிவாராத்திரி விழாவை ஒட்டி. சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்க பட்டது இத்திருக்கோவில் நிர்வாகிகள் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Next Story