மக்களுடன் முதல்வர் முகாம் அமைச்சர், எம்.பி., மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் முகாம் அமைச்சர், எம்.பி., மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
X
குமாரபாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர், எம்.பி., மாவட்ட கலெக்டர் பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒன்றிய செயலர் நாச்சிமுத்து தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஈரோடு எம்.பி.பிரகாஷ், மாவட்ட கலெக்டர் உமா, குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தாசில்தார் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பண்ணையார் ஆட்சிமுறையை மாற்ற வேண்டும் என்று த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் மதிவேந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களின் முதல்வர் ஸ்டாலின், மக்களுடன் நெருங்கி பழகி வருகிறார். அப்பா என்று அழைப்பதை பெருமையாக கருதி வருகிறார். முன்பெல்லாம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க, அரசு அலுவலகம் சென்று, அரசு அதிகாரிகளை சந்தித்து ,மனுக்கள் கொடுப்பது வழக்கம். ஆனால், இப்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம், மக்கள் இருக்கும் இடம் தேடி வந்து, மக்களிடம் மனுக்கள் பெற்று, அவர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். பண்ணையார் ஆட்சி என்றால் இதுபோல் தான் இருக்குமா? இந்த ஒரு திட்டம் போதும், நம் முதல்வர் புகழ் பாட. அவர் யாருடைய தூண்டுதலில் பேசி வருகிறார் என்பது என்பது எங்களுக்கு தேவையில்லை. அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கும் மேலாக வென்று ஆட்சிக்கு வருவோம். இதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story