மயான காளியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்

X
Komarapalayam King 24x7 |27 Feb 2025 4:27 PM ISTகுமாரபாளையம் மயான காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மயான காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மயான காளியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனைகள் நடந்தது. நள்ளிரவு 12:00 மணியளவில் பெரியான்டிச்சி அம்மனுக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது. இன்று காலை 09:00 மணியளவில் மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மதியம் ௦௩:௦௦ மணியளவில் மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், மயான கொள்ளை நடைபெறவுள்ளது. இரவு 08:00 மணியளவில் பெரியான்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு வைபவம், பிப்.28ல் எருமைக்கிடா வெட்டுதல், மார்ச். 1ல் மாலை 06:00 மணிக்கு மகா குண்டம், பூ மிதித்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
