திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் - ரயில்வே கைவரிப்பு

X
சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை நெருக்கடியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம். இங்கு உள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்கு வேண்டி திருநெல்வேலி, திருவனந்தபுரத்துக்கு தினசரி ரயில் பயணம் செய்கின்றனர். தற்போது நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கம் போதிய பயணிகள் ரயில் சேவை உள்ளது. ஆனால் திருநெல்வேலி மார்க்கம் போதிய பயணிகள் ரயில் சேவை இல்லை. கேரளா அரசு திருவனந்தபுரம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் என்ற மூன்று மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் திருவனந்தபுரம் திருநெல்வேலி மார்க்கத்தில் ஒரு மணி நேரத்தில் ஒரு மெமு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் இயக்க இயலாது என்று ரயில்வே அறிவித்துள்ளது. போதிய அளவில் பெட்டிகள் இல்லாததால் இந்த நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்ட ரயில் பணிகள் சங்க ஆலோசனை குழு கூட்டத்தில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குமரி மாவட்ட ரயில் பணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.
Next Story

