பரமத்திவேலூரில் திமுக மாவட்டச் செயலாளருக்கு வரவேற்பு.

X
Paramathi Velur King 24x7 |27 Feb 2025 6:40 PM ISTபரமத்தி வேலூரில் திமுக மாவட்ட செயலாளருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பரமத்தி வேலூர், பிப்.27: நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக மூர்த்தியை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த கே.எஸ்.மூர்த்திக்கு சிறப்பான வரவேற்பு வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர். இன்று பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூரில் திமுக நிர்வாகிகளை சந்தித்த கே.எஸ் மூர்த்திக்கு நகர செயலாளர் முருகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த சிறப்புரையாற்றினார். அதில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளையும் வெற்றி பெறச் செய்து முதல்வருக்கு பரிசாக வழங்கவேண்டும், மீண்டும் இது திமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் முரளி உள்ளிட்ட நகரம்,ஒன்றியம்,கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
