செஞ்சி அருகே விமர்சையாக நடைபெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக

X
செஞ்சி அடுத்த மேல்களவாய் உண்ணாமலை அம்மன் அருணாசலேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அதனையொட்டி கடந்த 24ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சாமி விக்கிரகங்கள் கரிக்கோல ஊர்வலமும், மாலை வாஸ்து சாந்தி பிரவேசபலி, எஜமான சங்கல்பம் நடந்தது.நேற்று முன்தினம் காலை கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற் கால யாக சாலை பூஜை, மாலை இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது.நேற்று மூன்றாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மூல மந்திர ஹோமம், திருமுறை சமர்ப்பணம், மகா மகாபூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.45 மணிக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story

