வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா.

வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா.
X
வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா மற்றும் ஆண்டு விழா.
பரமத்திவேலூர், பிப்.27: பர மத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் திருவள்ளு வர் சிலை திறப்பு விழா, குற ளின் குரலாய் கருத்துக்காட்சி மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசி ரியை மாலதி தலைமை வகித் தார். நாமக்கல் மாதேஸ்வரன் எம்.பி., முன்னாள் எம் எல்ஏவும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாள ருமான மூர்த்தி ஆகியோர் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் அமைத்திருந்த குறளின் குரலாய் கருத்து கண் காட்சி அரங்கத்தினை திறந்து வைத்து பார்வையிட்டனர். பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, துணைத்தலைவர் அன்பரசு, அட்மா குழு தலைவர் சண்முகம், எலச்சிபாளையம் தங்கவேல், வேலூர் நகர திமுக செயலா ளர் முருகன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். பட்டதாரி ஆசிரியர் மணி வண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகள், கலைத்தி ருவிழாவில் வில்லுப்பாட்டு போட்டிகள் பனிக்கட்டியின் மேல் நின்று 2 மணி நேரம் சிரமம் சுற்றி உலக சாதனை படைத்த மூன்றாம் வகுப்பு மாணவன், யோகா கராத்தே சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டிமன்றபேச்சாளர் அருண் கலந்து கொண்டு சிரிப்போம் -சிந்திப்போம் என்ற தலைப்பில் பேசினார்.
Next Story