முதல்வர் மருந்தக  மருந்து சேமிப்பு கிடங்கு  ஆய்வு

முதல்வர் மருந்தக  மருந்து சேமிப்பு கிடங்கு   ஆய்வு
X
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகம், கல்குளம் வட்டம் முத்தலாங்குறிச்சி வருவாய் கிராமத்திற்குட்பட்ட கேரளபுரம், இராஜா பாதை தெரு, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் இரயில்வே நிலையம் இருளப்பபுரம் ஆகிய பகுதிகளில் முதல்வர் மருந்தகங்களை  கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் இன்று (27.02.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-   கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 37 மையங்களில் முதல்வர் மருந்தகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   அரசால்  அறிவிக்கப்பட்டுள்ள மருந்து வகைகள் தங்கு தடையின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. என தெரிவித்தார்.  மேலும் இலவச பட்டா, மினி பஸ் இயக்கம் குறித்தும் ஆய்வு நடத்தினார்.        நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story