சேலம் அரசு மருத்துவமனையில் போதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் போதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
X
முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொளிக் கட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தா தேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் முன்னிலையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து இந்த மையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் யாரேனும் போதை பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்தால் அவர்களும் தங்கி சிகிச்சை பெறும் வகையில் இம்மையத்தில் வசதிகள் உள்ளன. குறிப்பாக வாரத்தின் அனைத்து நாள்களிலும் இம்மையும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story