வெங்கரை அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா.

வெங்கரை அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா.
X
வெங்கரை அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,பிப்.27: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் மற்றும் வெங்கரை பேரூராட்சித் தலைவர் விஜி(எ) விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி பாராட்டி மாணவர்கள் இடையே சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story