சமுதாய வளைகாப்பு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்

மீஞ்சூர் ஒன்றியத்தில் 100 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் : மீஞ்சூர் ஒன்றியத்தில் 100 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மீஞ்சூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சுகன்யாவிற்கு வளைகாப்பு விழா நடத்திய எம்எல்ஏ திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நூறு கர்ப்பிணி பெண்களுக்கு இன்று தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது இதில் மீஞ்சூர் பேரூராட்சியின் 1வது வார்டு கவுன்சிலரான சுகன்யா உள்ளிட்ட அனைவருக்கும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வளையல்கள் மாலை அணிவித்து நலங்கு வைத்து சமுதாய வளைகாப்பினை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார் பின்னர் அனைவருக்கும்அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தனர். பழம் மற்றும் காய்கறிகளால் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த குத்து விளக்கினை ஏற்றி வைத்து ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டி கர்ப்பிணி பெண்களிடம் விழிப்புணர்வை மேற்கொண்டு ஆரோக்கிய உணவு ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்த கண்காட்சியை அங்கு அமைத்திருந்தனர்
Next Story