நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா.
X
நன்செய் இடையாறு திருவீளீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
பரமத்தி வேலூர், பிப். 27: நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் அருகில் உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நான்கு கால பூஜைகளாக நடைபெற்ற இவ்விழாவில் முதல் கால பூஜையாக பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகமும்,சிவப்பு வஸ்த்திரம், வில்வம்,சக்கரவள்ளி கிழங்கு நிவேதனம் செய்து வில்வ இலை மற்றும் மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்று. இரண்டாம் கால பூஜை பஞ்சாமிர்த அபிஷேகமும்,மஞ்சள் வஸ்திரம்,பாயசம் நிவேதனம் செய்து தாமரை மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்று. மூன்றாம் கால பூஜை தேன்,வெண்ணீர் அபிஷேகமும்,வெண் வஸ்திரம்,அகில் கட்டையுடன் பன்னீர் அரைத்து சாத்துதல் மற்றும் வெண்மொச்சை,பாசி பருப்பு பாயசம், நிவேதனம் செய்து பச்சை வஸ்த்திரம்,தாழம்பூ,துளசி மாலை அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்று. நான்காம் கால பூஜை கருப்பஞ்சாறு அபிஷேகமும்,சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து நந்தியா வட்டை மலர்,அல்லி மலர்,மரிக்கொழுந்து அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்று. சுவாமிக்கு நிவேதனம் செய்த சர்க்கரைப் பொங்கல் படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நன்செய் இடையா சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story