முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம்

X
Komarapalayam King 24x7 |27 Feb 2025 8:20 PM ISTகுமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகை செல்வன் பங்கேற்று பேசினார்கள். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சி குறித்து அமைச்சர்களுக்கும் தி.மு.க.வினருக்கும் என்ன என்பது குறித்து தெரியாது. திமுக அரசு நினைத்திருந்தால் கல்வியினை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல சாதனைகளை புரிந்துள்ளார் ஆனால் தற்போதைய முதல்வரின் ஏதேனும் ஒரு சாதனையை கூற முடியுமா? இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி பேசியதாவது: போதை பொருட்கள் விற்பதில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. நள்ளிரவில் போன் செய்து லாட்டரி விற்பனை பற்றி சொன்னாலும், உடனே அந்த நபரை கைது செய்த அரசு அ.தி.மு.க. அரசு. பள்ளிக்கு செல்லும் மாணவி கற்பழிக்கப்படுகிறார் என்று சொன்னால், யாரை நம்பி பள்ளிக்கு அனுப்புவது? 4,௫ பேர் சேர்ந்து ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துகிறார்கள். சமீபத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சொன்னார்கள், முன்னாள் அமைச்சர் என்ன செய்து விட்டார் இந்த தொகுதிக்கு? என்று. தாலுக்கா அலுவலகம் கொண்டு வந்தது அவர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இது முன்னாள் முதலவர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் தற்காலிகமாக அண்ணா மண்டபத்தில் செயல்படுத்தப்பட்டு, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. இதே போல் கலை அறிவியல் கல்லூரி, புதைவட மின் பாதை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
