மயான காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை கோலாகலம்

மயான காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை கோலாகலம்
X
குமாரபாளையம்  மயான காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி  மயான கொள்ளை நிகழ்ச்சி  நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  மயான காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி  நேற்றுமுன்தினம்  காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மயான காளியம்மன்  சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனைகள் நடந்தது. நள்ளிரவு 12:00 மணியளவில் பெரியான்டிச்சி அம்மனுக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது. நேற்று காலை  காலை 09:00 மணியளவில்  மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மதியம் ௦௩:௦௦ மணியளவில் மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், மயான கொள்ளை,  இரவு 08:00 மணியளவில் பெரியான்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு வைபவம் நடந்தது. பிப்.28ல் எருமைக்கிடா வெட்டுதல், மார்ச். 1ல் மாலை 06:00 மணிக்கு மகா குண்டம், பூ மிதித்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story