மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

X
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராதா பிரசாத் ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்டஅவைத் தலைவர்நடன சபாபதி தலைமை வகித்தார்.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே எஸ் மூர்த்தி, தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.சிறப்பு அழைப்பார்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டார்.செயற்குழு கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கிரி பேசும் போது ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் சார்பணி நிர்வாகிகளுக்கு கிடைப்பதில்லை எனக் கூறினார். எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பேசும்போது நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று தலைவர் காலடியில் சமர்ப்பிக்க பாடுபட வேண்டும் எனக் கூறினார்கள் திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன் பேசும் போது நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஆளுமையுள்ள நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் ஒரு அமைச்சர் என பலரும் உள்ளனர் ஆனால் நாமக்கல் மேற்கு மாவட்டத்தை பொருத்தவரை ஒரு எம்எல்ஏ தான் இருக்கிறார் அவரும்கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுகிறார் மேற்கு மாவட்டத்தில் ஆளுமைகள் இல்லை கிழக்கு ஆளுமைகள் மேற்கு மாவட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும் ஆளுமை மிக்க மிக்க பதவிகளில் மேற்கு மாவட்டத்தினர் நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறினார் மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் பேரூராட்சி தலைவர் திருமலை பேசும் போது நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வாக்குகள் குறைந்துள்ளது என கண்டு அந்த பகுதிகளில் கவனம் செலுத்தினால் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என கூறினார்.இதே கருத்தை வலியுறுத்தி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி பேசினார் இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின்72 ஆவது பிறந்த நாளைமாவட்டம் முழுவதும் கொடியேற்றியும் கட்சி நிர்வாகிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மரக்கன்று நடுதல் என சிறப்பாக கொண்டாட வேண்டும். மார்ச் 1ஆம் தேதி மேற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க வேண்டும் என முடிவெடுக்க பட்டது மேலும் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஒன்றிய நகர திமுக சார்பில் வரும் 11ஆம் தேதி முதல் 01.04. 2025 வரை திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட திமுகவின் முக்கிய பேச்சாளர்களை வைத்து தெருமுனைப் பிரச்சாரம் செய்வது மேலும் வரும் 28ஆம் தேதி அனைத்து கட்சி சார்பில் சென்னையில் நடைபெற இருக்கும் ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப் பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன்உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள்மகளிர் அணி இளைஞரணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

