குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதம்-அமைச்சர் நிதி உதவி!

X
ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 38). தனது இரு மகள்களுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். ஜவுளி துணிகளை மொத்தமாக வாங்கி வந்து சில்லறை வியாபாரம் செய்து வந்த நிலையில், மயான கொள்ளை திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பாலாற்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது குடிசை வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததோடு, ஜவுளி வியாபாரத்திற்கு வைத்திருந்த துணிகள், வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கியதோடு, உடனடியாக பட்டா வழங்கி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story

